2 இராஜாக்கள் 17:6-28
1. இதினிமித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள்பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.
2. உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமும் இன்னதென்று கேட்டிருப்பீர்களே;
3. அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
4. இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.
5. அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்;
6. இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.
7. தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்.
8. பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
9. தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே,
10. உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக,
11. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
12. அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.
13. ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே.
14. இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய,
15. நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,
16. நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,
17. விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,
18. சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;
19. அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
20. நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,
21. சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
ஜனங்களைத் தம்முடனும், ஒருவர் மற்றவருடனும், ஒப்புரவாக்குவதன் மூலம், தமது மகிமையை வெளிப்படுத்துவதுதான் தேவனுடைய மாபெரும் நோக்கமாகும். திருச்சபையானது இந்த நோக்கத்திற்கு மையமாக இருக்கிறது. நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, ஒவ்வொரு காலம் மற்றும் இடத்தைச் சேர்ந்த அனைத்து விசுவாசிகளாலும் உருவாக்கப்பட்ட அவருடைய திருச்சபையில், நாம் ஓர் அங்கமாக ஆகிறோம். நாம் ஒரு திருச்சபையில் தேவனை ஆராதித்து, அவருக்கு ஊழியம் செய்யும்போது, தேவனுடைய நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. கிறிஸ்து, திருச்சபையை நேசிக்கிறார்; நாம் அவரது நண்பர்களாயிருந்தால், நாமும் திருச்சபையை நேசிப்போம்.
எபேசியர் 3:1-21
திருச்சபை என்னும் வார்த்தையைக் கேட்கும்போது, உங்கள் மனதில் தோன்றும் முதலாவது
காரியம் என்ன? வண்ணக் கண்ணாடி ஜன்னல்களா? ஆர்கன் வாத்திய இசையா? அங்கிகளா?
மெழுகுவர்த்திகளா? காணிக்கைப் பெட்டியா?
கிறிஸ்துவண்டை ஈர்க்கப்பட்ட, ஆனால் திருச்சபையைப்பற்றி அதிகம் சிந்திக்காத மக்களிடம்,
பேசுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகப் போதகர் ஸ்மித் கூறுகிறார். தனித்துவத்திற்கு
மிகவும் முக்கியத்துவமளிக்கும் ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்; இதில், திருச்சபை
எங்கு பொருந்திவரும் என்பதைக் காண்பது, எப்பொழுதுமே அவ்வளவு எளிதானதல்ல.
திருச்சபையின் பயன் என்ன?
ஒரு சிலர், திருச்சபை ஆராதனைக்காக இருக்கிறது என்கிறார்கள்; ஆனால் நீங்கள்,
தனியாகவோ, சில நண்பர்களுடனோ ஆராதிக்கமுடியும். வேறு சிலரோ, திருச்சபை சுவிசேஷம்
அறிவிக்கப்படுவதற்காக இருக்கிறது என்கிறார்கள். ஆனால் சுவிசேஷமானது உறவுகளின்
மூலமாகவே அறிவிக்கப்படுகிறது; எனவே, கிறிஸ்து உங்களை வைத்திருக்கும் இடத்தில்,
நீங்கள் அவருக்குச் சாட்சியாய் இருப்பீர்களானால், உங்களுக்கு ஏன் ஒரு சபை
தேவைப்படுகிறது? மற்றும் சிலர், திருச்சபை ஐக்கியங்கொள்வதற்காக இருக்கிறது என
நம்புகிறார்கள். ஆனால் சில நண்பர்களுடன் ஆழ்ந்த ஐக்கிய உறவு உங்களுக்கிருந்தால்
அதிலேயே நீங்கள், ஒரு பெரிய சபையினருடன் காணமுடியாத, தனிப்பட்ட ஐக்கிய
நிலையைக் காண்பீர்கள். ஆகவே, ஒரு திருச்சபை நமக்கு ஏன் தேவைப்படுகிறது?
பிரச்சினையானது, இந்தக் கேள்வியுடன் சம்பந்தப்பட்ட எதையும்விட ஆழமானதாய்
இருக்கிறது. சிலர், திருச்சபையால் தங்களது விசுவாசம் காயப்படுத்தப்பட்டுள்ளதாகச்
சொல்கிறார்கள். ஒரு போதகர் அல்லது குருவானவர் அவர்களுக்குத் தவறிழைத்தார்கள், ஒரு
சபை பிளவுபட்டது, அல்லது யாரோ அவர்களைப் புண்படுத்தினார்கள், ஆகவே
அப்போதிலிருந்து அது ஒரு தடையாகவே இருந்துவருகிறது.
மேற்கூறிய கேள்விகளை நேர்மையோடு எதிர்கொள்வது முக்கியமானதாகும். புதிய ஏற்பாடு
அப்படித்தான் செய்கிறது. ஆதித் திருச்சபைகள், பு+மியில் பரலோகத்தைப் பிரதிபலித்ததாக
அப்போஸ்தலர்கள் தெரிவிக்கவில்லை. மாறாக, தவறான பாலியல் நடத்தை, சட்டரீதியான
வாக்குவாதம், போதகரீதியான பிழைகள், ஆளுமைத்தன்மையினிமித்தம் பிரிவினைகள்,
ஆவிக்குரிய அனுபவங்களைப்பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்கள், சுயநலம்,
மனதுருக்கமின்மை, பாரம்பரிய உபதேசம், சர்வாதிகாரம், பெருமை, சூழ்ச்சி நிறைந்த
தலைவர்கள், அதிகாரத் துஷ்பிரயோகம், மற்றும் பணத்தைக் கையாள்வதில் முறைகேடு,
ஆகிய பிரச்சினைகளைப்பற்றிப் புதிய ஏற்பாட்டின் நிருபங்கள் பேசுகின்றன. இந்தப் பட்டியல்
மனச் சோர்வடையவைக்கிறது; ஆனாலும் அந்த நேர்மை, புத்துணர்வு+ட்டுவதாய் இருக்கிறது.
திருச்சபைகள், சீர்ப்படுத்தப்படுகிற நிலையிலிருக்கும் பாவிகளின் குழுக்கள் ஆகும். ஆனால்,
இயேசுவே தங்களது ஆண்டவர் என்று சொல்லுகிறவர்கள் அனைவருமே, பரலோக
ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பதில்லை. கடைசி நாளிலே, சில பிரசங்கியார்கள், ஊழியத்
தலைவர்கள் மற்றும் சபை அங்கத்தினர்கள் ஆகியோர், தேவனுடைய ராஜ்யத்திற்கு
வெளியிலே தாங்கள் நின்றுகொண்டிருக்கக் காண்பார்கள்; கிறிஸ்து அவர்களிடம், “நான்
ஒருக்காலும் உங்களை அறியவில்லை” (மத்தேயு 7:23), என்று சொல்வார்.
வேத வசனங்கள், திருச்சபையின் பாவங்களைத் நேர்மையுடனேகூட அறிக்கையிடுகிறதையும்,
அதைச் சுட்டிக்காட்டுவதுமின்றி, நாம் தீவிரமாய்ச் சீர்ப்படுத்தவேண்டிய திருச்சபைக்கான ஒரு
தரிசனத்தையும் நமக்குத் தருகின்றன. தேவனுடைய நோக்கம், “உன்னதங்களிலுள்ள
துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது
சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவர(வேண்டும்)” (எபேசியர் 3:10), என்பதேயாகும்.
எப்பொழுதுமே தேவனுடைய நோக்கம், தமது அநந்த ஞானத்தை, உன்னதங்களிலுள்ள
எண்ணிலடங்காத பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்துவதாகவே இருந்துவந்துள்ளது. இதை
அவர் செயல்படுத்தும் வழி, திருச்சபையின் மூலமாகவே அமைந்து உள்ளது.
தேவன் உலகத்தின் ஒவ்வொரு தேசத்திலிருந்தும் ஜனங்களை இயேசுவினிடமாய்த் திருச்சபை
என்னும் ஒரு புதிய சமுதாயத்துக்குள் கூட்டிச் சேர்த்துக்கொண்டுவருகிறார். அந்தச் சபை,
இனம், மொழி மற்றும் கலாசாரத் தடைகளையெல்லாம் கடந்ததாக இருக்கிறது. தேவனின்
புதிய சமுதாயத்துக்குள், “யு+தனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும்
சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து
இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்” (கலாத்தியர் 3:28).
அதைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்! யு+தரும், அராபியரும், கறுப்பரும், வெள்ளையரும்,
வாலிபரும், முதியோரும், செல்வந்தரும், ஏழையரும், என்று இப்படி எல்லாருமே ஒரு புதிய
சமுதாயத்தில் ஒன்றுகூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். இந்த உலகம் இதைக்குறித்துக் கனவு
காண்கிறது. நம்மை வேறுபடுத்துகிற அனைத்தையும் கடந்த, ஆழ்ந்ததொரு ஐக்கியத்தைக்
கிறிஸ்துவில் நாம் ஒருவர் மற்றவருடன் கொண்டிருக்கிறோம்.
நாம் சற்றுக் குறிப்பான விதத்தில் இதைப் பார்ப்போம். ஒரு வானியற்பியல் பேராசிரியர்,
கர்த்தரை அறியாத தனது உடன் பணியாற்றும் சக பேராசிரியரைவிட, கல்வியறிவற்ற ஒரு
விசுவாசியுடன் அதிகம் ஒத்துப்போகிறார். கிறிஸ்துவை அறிந்த ஒரு கோடீஸ்வரர்,
கிறிஸ்துவைக்குறித்து எதுவுமே அறியாத, பணக்கார நண்பர்களைவிட, மிகவும்
ஏழ்மையிலுள்ள ஒரு விசுவாசியுடன் அதிகம் ஒத்துப்போகிறார். சாஸ்திரீய சங்கீதத்தை
இரசிக்கும், இரட்சிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவப் பெண்மணி, ஓர் இரட்சகருக்கான தங்களது
தேவையை ஒருபோதும் உணர்ந்திராத, சிம்ஃபொனி இசைக்குழுவிலுள்ள தன்
நண்பர்களைவிட, இயேசுவை நேசிக்கும் ஓர் உயர்நிலைப் பள்ளி ‘ராப்’ இசைக்
கலைஞருடன், அதிகம் ஒத்துப்போகிறார்!
கல்வி, வருமானம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றின் வேறுபாடு, ஒரு குறிப்பிட்ட கால அளவே
நீடிக்கும். ஆனால், தேவஜனங்களின் ஐக்கியம் நித்தியமானது; திருச்சபையின் மூலமாக
காட்சிப்படுத்தப்படும் தேவனின் ஞானத்தைக் காணும்போது, தேவதூதர்களும் ஆச்சரியப்பட்டுப்
பிரமிக்கிறார்கள் (எபேசியர் 3:10).
மிகச்சரியாகச் சொல்வதானால், திருச்சபை என்பதுதான் என்ன? ஒவ்வொரு நாள் காலையிலும்
மூன்று கிறிஸ்தவர்கள் ஒரு பேருந்து நிறுத்தத்தில் சந்தித்தால், அவர்கள் ஒரு திருச்சபையா?
அவர்கள் காஃபி மற்றும் டீக்கடைகளில் வேதாகமத்தைப்பற்றிப் பேசினால், எப்படி? உங்களது
சிறு குழு அல்லது ஜெபக்குழு ஒரு திருச்சபையா? ஒரு கிறிஸ்தவக் குடும்பம் ஒரு
திருச்சபையா? அப்படி இல்லையென்றால், ஏன் இருக்கக்கூடாது?
அதிக எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள், “திருச்சபை” என்பது, எந்த நேரத்திலும், அல்லது
எவ்விடத்திலும் கிறிஸ்தவர்களாகக் கூடிவருகிறது, என்றும் எண்ணுகிறார்கள். அவர்களின்
எண்ணம் சரியா?
திருச்சபையைப்பற்றிப் பேசியபோது, இயேசு சொல்லவந்தது என்ன? இயேசு, “சபை” என்ற
வார்த்தையை இரண்டு முறைகள் பயன்படுத்தினார்; அவர் சொன்னது, திருச்சபையைக்குறித்த
வரையறையை நமக்கு வழங்குகின்றது. முதன்முறையாக அவர், ‘இயேசுதான் கிறிஸ்து’
என்று பேதுரு அறிக்கைசெய்தபோது சொன்னார். இயேசு அவரிடம்: “… நான் உனக்குச்
சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்
கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்தேயு 16:18), என்று
சொன்னார்.
இங்கே கிறிஸ்து, ஓர் உள்ளுர்த் திருச்சபையைப்பற்றி அல்லது ஒரு சபைப் பிரிவைப்பற்றிப்
பேசவில்லை; ஆனால், எல்லாக் காலங்களிலும் மற்றும் எவ்விடத்திலும் உள்ள அனைத்து
விசுவாசிகளைப்பற்றிப் பேசுகிறார். அனைத்து விசுவாசிகளையும் கொண்டிருக்கிறதான, ஒரே
திருச்சபைதான் இருக்கிறது; அதைக் கிறிஸ்துவே கட்டியெழுப்புகிறார்.
இந்தச் சபையைப் “பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வதில்லை” (16:18). ஓர் உள்ளுர்த்
திருச்சபையைப்பற்றி அல்லது ஒரு சபைப் பிரிவைப்பற்றி நீங்கள் அவ்வாறு சொல்லமுடியாது.
தங்கள் வழியைவிட்டு விலகி, மூடப்பட்ட சபைகளையும், சபைப் பிரிவுகளையும்குறித்த
சோகக் கதைகள் உலகெங்கிலும் உண்டு. ஆனால் கிறிஸ்து கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும்
திருச்சபையானது, ஜீவனுள்ளதாயும், ஆரோக்கியமாயும் இருக்கிறது. அது எக்காலத்திலும்,
எவ்விடத்திலும் இருக்கக்கூடிய, அனைத்து விசுவாசிகளையும் ஒன்றிணைத்துவருகிறது.
இரண்டாம் முறையாகச் சபையைப்பற்றிப் பேசும்போது அவர், “உன் சகோதரன் உனக்கு
விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில்,
அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து. . . . அவன் செவிகொடாமற்போனால், . . . .
இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. . . . அவர்களுக்கும் அவன்
செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து” (மத்தேயு 18:15-17), என்று
சொன்னார்.
“சபை” என்னும் வார்த்தை இங்கே மிகத் தெளிவாக, வித்தியாசமானதொரு அர்த்தத்தைக்
கொண்டிருக்கிறது. அது: “எக்காலத்திலும், எவ்விடத்திலுமுள்ள அனைத்து விசுவாசிகளுக்கும்
அதைத் தெரியப்படுத்து,” என்று பொருள்படமுடியாது. எவராலும் அதைச் செய்யமுடியாது.
இயேசு இங்கே, ஓர் உள்ளுர் விசுவாசிகளின் திருச்சபையைப்பற்றித்தான் தெளிவாகப்
பேசியிருக்கிறார்.
எனவே சபை என்னும் வார்த்தையை, நம் ஆண்டவர் இரண்டு விதங்களில் பயன்படுத்தினார்:
முதலாவது, எக்காலத்திலும், எவ்விடத்திலும் உள்ள அனைத்து விசுவாசிகளையும்
விவரிப்பதற்காக. இரண்டாவது, உள்ளுர் விசுவாசிகளின் திருச்சபையை விவரிப்பதற்காக.
திருச்சபை என்பது, தாங்களாகவே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் மக்கள் குழு அல்ல. அது
ஒருபோதும், நீங்களும், நானும் மற்றும் நாம் தெரிந்துகொள்ளும் சில நண்பர்களும் மட்டுமே
அல்ல. கிறிஸ்து, ஜனங்களைத் தம்மில் விசுவாசம்கொள்ளும்படியாகச் செய்து, அவர்களை
உள்ளுர்ச் சபைகளில் கூட்டிச் சேர்த்துத் தமது திருச்சபையைக் கட்டியெழுப்புகிறார்.
திருச்சபை இப்பொழுது இருக்கும் நிலைக்கும், அது பின்வரும் நாளில் இருக்கப்போகும்
நிலைக்கும், பெரிய வித்தியாசம் உள்ளது: “. . . . கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து,
பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும்
பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும்
தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” (எபேசியர் 5:25-27).
முன்பொரு காலத்தில், பொல்லாததொரு சித்தியும், அழகற்ற இரு சகோதரிகளையும் உடைய,
ஒரு சிறு பெண் இருந்தாள். அவள், சமையலறையில் வேலைசெய்வதற்கு உட்படுத்தப்பட்டுக்
கந்தலான ஆடைகளுடன், அடுப்புத் தணலண்டையிலேயே எப்பொழுதும் உட்கார்ந்திருப்பாள்;
ஆகவே சிண்ட்ரெல்லா என்று அவளை அழைத்தார்கள்.
ஒரு நாள் ராஜாவானவர், தேசத்தில் கன்னிகைகளாயிருந்த அனைத்து இளம் பெண்களையும்,
தனது அரண்மனையில் நடைபெற்ற ஒரு மாபெரும் நடன விருந்துக்கு அழைப்பித்தார். அவர்,
இளவரசரான தனது குமாரன், காதலித்துத் திருமணம் முடிக்கவேண்டும் என்று விரும்பினார்.
அழகற்ற அந்த இரண்டு சகோதரிகளும் நடன விழாவிற்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள்;
ஆனால் சிண்ட்ரெல்லாவுக்கோ, உடுத்திக்கொள்ள நேர்த்தியான ஆடைகளில்லை – ஆகவே,
அவள் வீட்டிலேயே விட்டுவிடப்பட்டாள்.
பின்பு, அவளுக்குப் பாதுகாவலாயிருந்த தேவதை, அவளை மந்திரக் கோலால் தொட்டதும்,
சிண்ட்ரெல்லாவின் கந்தலாடைகள் எழில் மிகுந்த ஆடைகளாக மாறிவிட்டன – ஆனால் அது
நள்ளிரவுவரையில்தான்.
சிண்ட்ரெல்லா நடன விழா அரங்கிற்குள் வந்ததும், அவள் இளவரசரின் இதயத்தைக்
கவர்ந்துவிட்டாள். அவள் அவ்விடம்விட்டுக் கிளம்பவேண்டிய நள்ளிரவுவரையிலும் அவர்கள்
நடனமாடினார்கள்; ஆனால் சிண்ட்ரெல்லா நடன அரங்கத்தைவிட்டு ஓடியபோது, அவளது
கண்ணாடிக் காலணிகளில் ஒன்று, கழன்று விழுந்துவிட்டது.
அந்த இளவரசர், தான் நேசித்த அந்தப் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்குத் தீர்மானித்தார்.
அவர், அந்தத் தேசத்தின் ஒவ்வொரு கன்னிகையின் பாதத்திலும் அந்த ஒற்றைக் காலணி
பொருந்துகிறதா என்று சோதிக்கும்படியும், அது யாருக்குச் சொந்தமானதோ, அந்தப் பெண்,
அரண்மனைக்குக் கொண்டுவரப்படவேண்டும் எனவும் ஆணை பிறப்பித்தார்.
சிண்ட்ரெல்லா, வீட்டில் அமர்ந்திருப்பதைக் கற்பனை செய்துபாருங்கள். அவள்
கந்தலாடைகளை உடுத்திக்கொண்டு, அழகற்ற தன் இரு சகோதரிகளால் ஏளனம்
செய்யப்பட்டுப் பொல்லாத தன் சித்தியால் ஒடுக்கப்பட்டவளாக இருக்கிறாள். ஆனால் அவளது
முடிவோ, அன்பும், சந்தோஷமும் நிறைந்த அரண்மனை வாழ்வாகும்.
அதுவே திருச்சபையைக்குறித்த அற்புதமான ஒரு சித்திரிப்பாகும். திருச்சபையும்
இதேபோல்தான் சிலவேளைகளில் ஏதோ கந்தலாய்க் காணப்படுகிறது. மற்றொருபுறம், அவளை
இகழுகிற மற்றும் மதிப்பற்றவளாகவும் கருதுகிற, அழகற்ற சகோதரர்களும், சகோதரிகளும்
இருக்கிறார்கள். அவளைத் துன்புறுத்துகிற மற்றும் சிறைப்படுத்துகிற பொல்லாததொரு
சித்தியைக் கொண்டிருக்கிற உலகின் பகுதிகளும் உண்டு. ஆனால், கிறிஸ்து இந்தத்
திருச்சபையில் அன்புகூர்கிறார்; அவரே அவளைத் தம் இல்லத்திற்குக் கொண்டுவருவார்.
கிறிஸ்து சபையைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்ளும்போது, நாம் கந்தலும், கிழிசலுமான
ஆடைகளை உடுத்தியிருக்கமாட்டோம். திருச்சபையானது, “கறைதிரை முதலானவைகள்
ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான” ஒன்றாய் இருக்கும் (எபேசியர் 5:27).
திருச்சபை ஒளிர்ந்து பிரகாசிக்கும். அது மகிமையுள்ளதாக இருக்கும். மேலும் அது,
கிறிஸ்துவின் சந்தோஷத்தில் என்றென்றும் பங்கடையும்.
திருச்சபைதான், கிறிஸ்து தமக்குமுன் நிறுத்திக்கொள்ளப்போகும் மணவாட்டி என்பதை
எப்பொழுதுமே நினைவில்கொள்ளுங்கள். கிறிஸ்தவப் பள்ளிகள், இறையியல் கல்லூரிகள்,
மிஷனரி மற்றும் சுவிசேஷ நிறுவனங்கள் ஆகியவை, மணவாளருக்காக ஆயத்தப்படும்
மணவாட்டிக்கு ஒத்தாசை செய்யும் தோழிகள். மணவாட்டியானவளுக்கு, அவளது தோழிகள்
தேவை; ஆனால் மணவாட்டியைவிட அதிகமாய், மணவாட்டியின் தோழிகளுக்கு
முக்கியத்துவம் கொடுப்பது, மாபெரும் தவறாகும்.
வேதாகமத்தின் இறுதியில் பரலோகத்திலிருந்து, “அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள
தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார். நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத்
துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி
தன்னை ஆயத்தம்பண்ணினாள். . . . ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு
அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 19:6-9), என்று திரள்
கூட்டமான ஜனங்கள் ஆரவாரமாய்ச் சொல்லும் சத்தத்தை, அப்போஸ்தலராகிய யோவான்
கேட்கிறார்.
திருச்சபையானது, சீரமைக்கப்பட்டுவருகிறதான நிலையில் காணப்படுகிறது. அது, தேவன்
தன்னை அழைத்திருக்கிறதான, முழுமையான நிலையை இன்னும் எட்டவில்லை; அத்துடன்,
ஒரு நாள் அது அடையப்போகும் நிலையையும் இன்னும் அடையவில்லை. ஆனால்
திருச்சபையானது, கிறிஸ்துவின் மணவாட்டியாகும். அவர், அதற்காகத் தமது ஜீவனையே
கொடுத்தார்; தேவனுடைய நோக்கத்தின் மையமும் திருச்சபையாகும்.
ஹைடெல்பெர்க் வினா-விடைப் போதனை: "திருச்சபையைக்குறித்து நீங்கள் விசுவாசிப்பது என்ன?" என்னும் கேள்விக்கு, இப்படித்தான் பதிலளிக்கிறது: "உலகத்தின் துவக்கத்திலிருந்து அதன் முடிவுபரியந்தம், முழு மனுக்குலத்திலுமிருந்து நித்திய ஜீவனுக்கென்று தெரிந்துகொள்ளப்பட்டு, உண்மையான விசுவாசத்தில் ஒன்றாக இருக்கின்ற ஒரு சபையை, தேவனுடைய குமாரன் தம்முடைய ஆவியினாலும், வார்த்தையினாலும் ஒன்றுசேர்த்து, ஆதரித்து, தமக்குரியவர்களாகப் பாதுகாக்கிறார். மேலும் நான் அந்தச் சபையில், உயிருள்ள அங்கத்தினராக இப்பொழுதும், என்றென்றைக்கும் இருப்பேன். இதுவே, கிறிஸ்துவினுடைய "பரிசுத்த உலகளாவிய திருச்சபையைக்" குறித்த எனது விசுவாசமாக இருக்கிறது." அதனினும் மேலானதொரு பாக்கியத்தை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை.
1. திருச்சபையைக்குறித்து நீங்கள் நினைக்கும்போது, முதலாவதாக மனதில் தோன்றும் சில காரியங்கள் யாவை?
2. வேதாகமத்தின் அடிப்படையில், திருச்சபையின் மூலமாகத் தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3. உங்கள் சொந்த வார்த்தைகளில், இயேசு, திருச்சபை என்னும் வார்த்தையைப் பயன்படுத்தியதான, இரண்டு விதங்கள் யாவை?
4. சிண்ட்ரெல்லாவின் சித்திரிப்பிலிருந்து, உங்களைக் கவர்ந்தது என்ன?
5. 1 (நான் திருச்சபையை வெறுக்கிறேன்!)-லிருந்து, 5 (திருச்சபையின்மட்டில், நான் நடுநிலையோடு இருக்கிறேன்), 10 (நான் திருச்சபையை நேசிக்கிறேன்!) என்பது வரையிலான அளவுகோலில், நீங்கள் உங்களை எங்கே நிறுத்துவீர்கள்? ஏன்?